2 நாள் பயணம் தமிழ்நாடு வரும் காங்கிரஸ் தலைவர் தீவிர ஆலோசனையில் கட்சியினர்!!!

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

2 நாள் பயணம் தமிழ்நாடு வரும் காங்கிரஸ் தலைவர் தீவிர ஆலோசனையில்  கட்சியினர்!!!

 நாளை தமிழகம் வரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு  உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது.

தீவிர ஆலோசனையில் கட்சியினர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை,தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்லபிரசாத்,நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயகுமார்,மாநில பொது செயலாளர் சிரஞ்சீவி,எஸ் சி பிரிவின் மாநில தலைவர் ரஞ்சன் குமார்,மாநில துணை தலைவர்கள் கோபன்னா, பொன்கிருஷ்னமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திர சேகர்,ஹசன் மெளலானா,மாநில செயலாளர்கள் தளபதி பாஸ்கர்,கடல் தமிழ்வாணன்,தமிழ்செல்வம்,மாவட்ட தலைவர்கள் முத்தழகன், சிவராஜசேகரன்,மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

K.S.ALAGIRI (@KS_Alagiri) / Twitter

கே.எஸ் அழகிரி பேசுகையில்

இரண்டு நாள் பயணமாக அகில இந்திய தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக மல்லிகார்ஜுன் கார்கே நாளை சென்னை வருகிறார்.நாளை பகல் 12 மணிக்கு தமிழகம் வருகை தரும் அவர் தன் தங்கும் விடுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் அதன் பின்பு முதல்வர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் கலந்து கொள்கின்றார் அன்று இரவு சென்னையில் தங்குகிறார்.

மேலும் படிக்க | மாணவர்கள் இப்போது வேலைவாய்ப்பு வழங்குபவர்களாக மாறிவிட்டனர்...” ஜெகதீப் தன்கர்!
 
இரண்டாவது நாள் காலை   ஶ்ரீ பெரும்பத்தூரில் உள்ள ராஜிவ்காந்தி  காந்தி நினைவிடம் சென்று ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகின்றார் அதன்பின்பு,  அங்கு அன்னை  இந்திராகாந்தி சிலையை திறந்து வைக்க உள்ளார் மேலும்  கட்சி தொடர்பாக முக்கிய தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

பாஜகவுக்கு இறங்கு முகம் தொடங்கிவிட்டது: கே.எஸ்.அழகிரி கருத்து | BJP is  weaker than before says tamil nadu congress leader alagiri - hindutamil.in

சமூக நீதி என்னவென்று சொன்னால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்பது தான் சமூக நீதி

நாடு சுதந்திரம் அடைந்து காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த  போது காங்கிரஸ் காரர்களுக்கு மட்டும் அமைச்சர் பதவியை மகாத்மா காந்தி வழங்கவில்லை காங்கிரஸ் கட்சியின் தலைமை எதிரியாக இருந்து தொடர்ந்து எதிர்த்து வந்த அண்ணல் அம்பேத்கருக்கு அமைச்சர் பதவி வழங்கினார்

ஒரு கட்சியினுடைய அரசாங்கம் அல்ல

அரசாங்கம் என்பது ஒரு கட்சியினுடைய அரசாங்கம் அல்ல இது நாட்டு மக்களினுடைய அரசாங்கம் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.அதுதான் சிறந்த ஜனநாயகம் முறை என்பதை காந்தியின் ஆலோசனையுடன் ஜவஹர்லால் நேரு நடைமுறைப்படுத்தினார்.

மேலும் படிக்க | GST முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் கோரிக்கை வைத்த எம்.பி

அதனை பிரதிபலிக்கும் விதமாக இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் பதவிகளில் 50 சதவீதத்தை இளைஞர்களுக்கும் பழங்குடியின பட்டியலினத்தவர்களுக்கும் காங்கிரஸ் கட்சி வழங்கி உள்ளது இதுதான் சமூக நீதி அதானியை நம்பி முதலீடு செய்த பணம் தற்போது எங்கு உள்ளது என்று தெரியவில்லை. இது தவித்து வேறு ஒரு சில காரணங்களால் 10ஆயிரம் கோடி இழப்பீடு வந்துள்ளது.

மத்திய அரசு ஏன் அதானி கைது செய்யவில்லை

இது அரசாங்கம் துணை போனதால் மக்கள் பணம் பரி போய் இருக்கிறது...மத்திய அரசும் நிதி அமைச்சகம் துணை சென்றதால் தான் அதானி இதுபோன்ற மோசடியை செய்துள்ளார்.அதான் நீ குறித்து பிரதமர் இதுவரை வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகிறார் அதானினுடைய செயலுக்கு துணை போய்க்கொண்டிருக்கின்றார்.டெல்லி துணை முதல்வர் சிசோடியாவை கைது செய்யும் மத்திய அரசு ஏன் அதானி கைது செய்யவில்லை? என கேள்விகள் எழுப்பியவாறு  பேசி முடித்தார்.