சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்....!!

துபாய்,சாா்ஜா,இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.93.3 லட்சம் மதிப்புடைய 2.23 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்....!!

சாா்ஜாவிலிருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னைக்கு  விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை  அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு உள்நாட்டு பயணியாக வந்த  ஆண் பயணியை நிறுத்தி  சுங்கத்துறை அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த  ரூ.43.3 லட்சம் மதிப்புடைய ஒரு கிலோ தங்கப்பசை அடங்கிய பாா்சலை கைப்பற்றினா். மேலும் தங்கத்தை கடத்தி வந்த பயணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல்   துபாயிலிருந்து ஃபிளை துபாய், இலங்கையில் இருந்து ஏா்இந்தியா, சாா்ஜாவிலிருந்து ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய 3 விமானங்கள் அடுத்தடுத்து சென்னை பன்னாட்டு  விமானநிலையத்திற்கு வந்தது. அந்த விமானங்களில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது 3 விமானங்களிலும் வந்த சென்னையை சோ்ந்த 3 பயணிகள் தங்களுடைய உள்ளாடைகள், சூட்கேஸ்க்குள் மறைத்து வைத்திருந்த 1.23 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனா்.அதன்  மதிப்பு ரூ.50 லட்சம்.இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட பயணிகள் 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனா்.

சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் துபாய்,சாா்ஜா,இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வந்த 4 விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.93.3 லட்சம் மதிப்புடைய 2.23 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு,4 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com