போட்டி போட்டு ஒரே ஊரில் 2 மதுபானக்கடை!!!! அதிரடி காட்டிய எஸ்.பி......

போட்டி போட்டு ஒரே ஊரில் 2 மதுபானக்கடை!!!!  அதிரடி காட்டிய எஸ்.பி......

விற்பனை விலையே விட குறைந்த விலை


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே  கல்லல் தெற்கு 3வது வீதியில் கிங்பிசர் ரெக்ரேசன் கிளப் என்ற பெயரில  தனியார் மதுபான கூடத்திற்கு அனுமதி பெற்று  செயல்பட்டு வந்தது  திடீரென அரசு தனியார் மதுபான கூடத்திற்கு  விதித்துள்ள விதிமுறைகளை மீறி அரசுடாஸ்மார்க் மதுபான கடை அருகிலேயே போட்டி மதுபான கடை திறந்து அரசு மதுபான கடையில் விற்பனை செய்யும் விலையை விட குறைவாக விற்பனை செய்தனர் இதனால் காலையில் 11 மணியில் இருந்து இரவு 11 மணி வரை மதுபிரியர்கள் அரசு மதுபான கடையில் மது வாங்குவதை தவிர்த்து தனியார் மதுகடையில மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். போட்டி மதுபான விற்பனை குறித்து காரைக்குடி ஏஎஸ்பி ஸ்டாலினிடம் புகார் சென்றது. இதுகுறித்து ஏ. எஸ்பி ஸ்டாலின் மற்றும்  தனிப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் அரசு விதிகளை மீறி  டாஸ்மார்க் மதுபான கடைக்கு போட்டியாக அருகில கடைபிடித்து குறைந்த விலையில்  மதுபாட்டில்கள்  விற்பனை செய்தது  தெரியவந்தது. மேலும்  விற்பனைக்கு வைத்திருந்த பிராந்தி ,ரம், பீர் உள்ளிட்ட 7500  மது பாட்டில்கள்  மற்றும் ரூ25,000 பணத்தை பறிமுதல் செய்து  தனியார் பார் உரிமையாளர் திருநாவுக்கரசு, வீரபத்திரன் , பாலமுருகன ,
கருப்பையா, ஜான்போஸ்கோ, மாணிக்கவாசகம் உள்ளிட்ட 6பேர் மீது வழக்கு பதிந்து 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

 மேலும் படிக்க | இறந்த மனைவியே அந்திராவிலிருந்து ஒடிசாவுக்கு தோளில் சுமந்து சென்ற காதல் கணவன்

காவல்துறை அதிரடி 

மேலும் டாஸ்மார்க் மதுகடையை விட குறைந்த விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை மற்றும் விதிகளை மீறி அதிக அளவில் மதுபாட்டில  பறிமுதல் செய்யப்பட்டாதால் கைப்பற்றப்பட்ட  மது பாட்டிகள் போலிமது பாட்டில்களா ? வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வந்து  மதுபாட்டிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா ? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்