பள்ளிக்கு சென்ற + 2 மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு- பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

பள்ளிக்கு சென்ற + 2 மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு- பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பட்டிணம் ஊராட்சியை சேர்ந்தவர்கள் செல்லத்துரை,மகாலட்சுமி தம்பதி. இவரது மகள் சிவ சுந்தரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற நிலையில் திடீரென மயக்கம் அடைந்துள்ளார்.

மயக்கமடைந்த அவரை ஆசிரியர்கள் சிகிச்சைக்காக நெகமம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல்சிகிச்சை தேவைப்படுவதாக கூறியுள்ளனர். அதனையடுத்து சிவசங்கரி பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பையும் பள்ளி மாணவர்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தியது.