விஷம் கலந்த தண்ணீரை பருகியதால் 2 புலிகள் உயிரிழப்பு...?

நீலகிரியில், சமீபத்தில் இறந்த 2 புலிகள், விஷம் கலந்த நீரை பருகியதால் உயிரிழந்திருக்கலாம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
உதகை வனச்சரகத்திற்கு உட்பட்ட எமரால்டு பகுதியில் அவலாஞ்சி அணைக்கு அருகே 2 புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக வந்த தகவலை அடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்தனர். நிகழ்விடத்திற்கு வந்த 20 பேர் கொண்ட வனத் துறையினர், புலிகளின் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க : இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்...மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு!
தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் மேற்கொண்ட பிரேத பரிசோதனையில், விஷம் கலந்த தண்ணீரை பருகியதால் புலிகள் இறந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
#WATCH | Tamil Nadu: Two tigresses found dead under suspicious circumstances near the Emerald Dam area of Nilgiris district. (10.09) pic.twitter.com/lL6tqkqsah
— ANI (@ANI) September 11, 2023