திருச்செந்தூர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.40 கோடி.. 2.4 கிலோ தங்கம் காணிக்கை!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூன் மாத உண்டியல் காணிக்கையாக 2.40 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

திருச்செந்தூர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.40 கோடி.. 2.4 கிலோ தங்கம் காணிக்கை!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்படும் பணம், மாதம் 2 முறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதம் கடந்த 8-ந் தேதி எண்ணப்பட்ட போது, ஒரு  கோடியே 69 லட்சத்து 54 ஆயிரத்து 36 ரூபாயும், 2-ஆம் முறையாக நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியின்போது, 70 லட்சத்து 47 ஆயிரத்து 46 ரூபாய் உண்டியலில் இருந்தது தெரிய வந்தது. 2 முறையும் சேர்த்து மொத்தம், 2 கோடியே 40 லட்சத்து ஆயிரத்து 82 ரூபாய் கிடைத்துள்ளது. தங்கம் 2 கிலோ 435 கிராமும், வெள்ளி 15 கிலோ 960 கிராமும் கிடைத்தது. மேலும் வெளிநாட்டு நோட்டுகள் 359 கிடைத்துள்ளது.