2 ஆயிரம் ரூபாய வெச்சுகுனு என்ன விடு தெய்வமே...! வடிவேலு பாணியில் போலீசாரிடம் கெஞ்சிய போதை ஆசாமி..!

2 ஆயிரம் ரூபாய வெச்சுகுனு என்ன விடு தெய்வமே...!  வடிவேலு  பாணியில்  போலீசாரிடம் கெஞ்சிய போதை ஆசாமி..!
Published on
Updated on
1 min read

நடுரோட்டில் பீர்பாட்டிலை போட்டு உடைத்த நபரின் ஆட்டோவை பின் தொடர்ந்து வந்து பிடித்த போக்குவரத்து போலீசாரிடம் அதார் உதார் விட்டு கெஞ்சிய நபர்.

வடசென்னை இராயபுரம் கல்மண்டபம் சிக்னல் அருகே இரவு போக்குவரத்து பணியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் காந்தி மற்றும் ஓட்டுநர் இருவரும் பணியில் ஈடுபட்டு  இருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற ஆட்டோவில் இருந்து பீர் பாட்டிலானது சாலையில் போட்டு உடைக்கப்பட்டும் அந்த ஆட்டோ  நிற்காமல் வேகமாக சென்றது.

இதனை கண்ட போக்குவரத்து போலீசார், ஆட்டோவை பின் தொடர்ந்து விரட்டி  பிடித்தபோது அதில் மூவர் இருந்த நிலையில் மூவருமே  மது போதையில் இருந்துள்ளனர். அப்போது, ஆட்டோவில் இருந்து இறங்கிய வெள்ளை சட்டை அணிந்த நபர் ஒரூவர் தனக்கு அரசியல் வாதிகள் பலரை தெரியும் என பீட்டர் விட்ட போதும் கண்டு கொள்ளாத உதவி ஆய்வாளர், மூவரும் குடித்திருப்பதை உறுதி செய்தபின்,  அபராதம் விதித்தார்.

உடனே,  அவ்வளவு நேரம் பீட்டர் விட்ட அந்த அதார் உதார் நபர், ஒருகட்டத்தில் உதவி ஆய்வாளரிடம் தெய்வமே உனக்கு என்ன வேணு ம் - னு சொல்லு என் தெய்வமே,..! இந்த "2000 ஆயிரத்த வெச்சுனு என் ஆட்டோவயும் என்னையும் விட்டுடு தெய்வமே "- என்று,  கெஞ்சாத குறையாய் கேட்டிகொண்டிருந்தார். 

ஒரு கட்டத்தில் ஆட்டோவை காலை வந்து எடுத்து கொள்ளுமாறு கூறிவிட்டு காவலர் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றார். இந்நிலையில், போக்குவரத்து போலீசாரிடம் போதை ஆசாமி ஒருவர் வடிவேலு பட பாணியில் கெஞ்சிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com