100 நாள் வேலை வாய்ப்பு  திட்டத்தில் ரூ.246 கோடி ஊழல்... திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி...

இந்தியாவின் கலாசார பெருமையை உலகமே வியந்து பார்க்கிறது'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
100 நாள் வேலை வாய்ப்பு  திட்டத்தில் ரூ.246 கோடி ஊழல்... திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி...
Published on
Updated on
1 min read

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில்  தமிழக அரசின் மெத்தன போக்கை கண்டித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என  பாஜக அறிவித்துள்ளது.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, முல்லை பெரியாறு அணையின்  உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு  விட்டு கொடுத்துவிட்டதாக குற்றம்சாட்டினார். இதனை கண்டித்து  முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக அண்ணாமலை  அறிவித்தார்.கேரள அரசின் நடவடிக்கையால் 5  மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறினார்.

மேலும் 100  நாள் வேலை வாய்ப்பு  திட்டத்தில் 246 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும்,இதில் தவறு செய்தவர்கள் குறித்து விசாரணை  நடத்தி  அவர்கள் மீது  முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com