ஜல்லிக்கட்டு போட்டியில் நடந்த விபரீதம்...முதல் நாளேவா...?

ஜல்லிக்கட்டு போட்டியில் நடந்த விபரீதம்...முதல் நாளேவா...?

நடப்பாண்டின் முதல் நிகழ்வாக புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு தொடங்கிய நிலையில், கூட்ட நெரிசலால் 26 பேர் காயமடைந்ததோடு வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.

தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும் நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் 2023ம் ஆண்டின் முதல் நிகழ்வாக கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு தொடங்கப்பட்டது. முன்னதாக அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைத்தனர். இதையடுத்து வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடிவீரர்கள் துரத்தி அடக்கினர். ஏறத்தாழ 500 காளைகள் மற்றும் 300 மாடுபிடிவீரர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு...திருமாவளவன் ஆவேசம்!

கூட்ட நெரிசலில் ஏற்பட்ட விபரீதம்:

தொடர்ந்து கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், காவலர் உட்பட 26 பேர் காயமடைந்ததையடுத்து 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நெரிசலால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததையடுத்து,  தள்ளுமுள்ளில் ஈடுபட்டோரை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பைக், கட்டில், குக்கர் உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்பட்டன.