ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் 2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் 2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை  சோதனை!

சென்னை வடபழனியை தலைமையிடமாக கொண்டு கோவிந்தராஜன் என்பவர் ஆர்த்தி ஸ்கேன் மையத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்திற்கு தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் 45 கிளைகள் உள்ளன. 

அதுபோதாது என்று சமீபத்தில் பல்வேறு இடங்களில் புதிய கிளைகளை தொடங்கியது. ஆனால் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் அந்நிறுவனத்திற்கு சொந்தமான மையங்கள், நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்களின் வீடுகள் உட்பட 25 இடங்களில் தொடர்ந்து 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.  

சோதனையில் கடந்த காலங்களில் இந்த நிறுவனம் செய்த முதலீடுகள், மருத்துவ கருவிகள் கொள்முதல், வருவாய் மற்றும் செலவுகள் உள்ளிட்ட பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், ஒரு சில முக்கிய ஆவணங்கள் ஆய்வுக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே தேவைப்பட்டால் மேலும், 2 நாட்கள் சோதனை தொடர வாய்ப்புள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.