கொசு ஒழிப்பதற்காக 3  ட்ரோன்: சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னையில் கொசு ஒழிப்பதற்காக 3  ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு நாள் ஒன்றிற்கு மூன்று மண்டலங்களில் மருந்து தெளிக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை காலம் கிட்டத்தட்ட தொடங்கிவிட்டது, மழை காலங்களில் ஏற்படும் டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கிவிட்டது.கொசுக்கள் கால்வாய்களில் இருந்து அதிக அளவில் உருவாகிறது என கண்டறிந்த மாநகராட்சி அதை ஒழிப்பதற்கு புது முயற்சியில் இறங்கி உள்ளது. ட்ரோன் இயந்திரங்களைக் பயன்படுத்தி கால்வாய்கள் மற்றும் நீர் வழித்தடங்களில்  கொசுவை ஒழிக்கும் மருந்தை தெளிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சியுடன் அண்ணா பல்கலைக்கழகத்தின் AVIONICS துறை இணைந்து இந்த மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக தென் சென்னை, மத்திய சென்னை மற்றும் வடசென்னை என ஒரு பகுதிக்கு ஒன்று என்ற கணக்கில் 3 ட்ரோன் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றிற்கு மூன்று மண்டலங்களில் ட்ரோன் இயந்திரத்தை பயன்படுத்தி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தினமும் எந்த ட்ரோன் எந்த இடங்களில் பயன்படுத்தப்படுகிறது  என்ற விவரத்தை மாநகராட்சி தன் (https://www.gccdrones.in/) என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.