நீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலி: கேமராவை நீருக்குள் அனுப்பி உடல்கள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் வாளையாறு அணையில் மூழ்கிய 3 மாணவர்களின் உடல்களை, கேமரா மூலம் கண்டுபிடித்து தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

நீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலி: கேமராவை நீருக்குள் அனுப்பி உடல்கள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் வாளையாறு அணையில் மூழ்கிய 3 மாணவர்களின் உடல்களை, கேமரா மூலம் கண்டுபிடித்து தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

கோவை மாவட்டம் வாளையாறு அணையில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் ஆண்டோ, சஞ்சய், பூர்ண ஈஸ்வரன் ஆகிய  மூன்று பேரும்  நேற்று மாலை நீரில் மூழ்கினர். இவர்களைத் தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். 12 மணிநேர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் பூர்ண ஈஸ்வரனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மற்ற இரண்டு பேரின் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, கடற்படையினரின் உதவியுடன், கேமராவை நீருக்குள் அனுப்பி இரண்டு உடல்களையும் கண்டுபிடித்து, மீட்டனர். இவர்களின் உடல்கள் பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.