நீட் தேர்வு மூலம் தனியார் கல்வி நிறுவனங்கள் தான் அதிகம் லாபம் பெறுகின்றன என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டினார்.
தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவா், நீட் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசே ஒப்புக்கொண்டு விட்டதாக தெரிவித்தார். மேலும் 33 சதவீதம் மகளிர் இட ஒதுக்கீடு காணல் நீர் போன்றது எனவும் வீரமணி சாடினார்.
தொடர்ந்து பேசுகையில், “நீட் கொண்டு வந்தால் ஊழலை ஒழிக்க முடியும் என்றார்கள். ஆனால் நீட் தேர்வு மூலம் தனியார் கல்வி நிறுவனங்களும், கனவான்களும்தான் அதிகம் லாபம் பெற்றனர்”, என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டினார்.
மேலும், சனாதானம் ஒழிப்பு குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தங்களுடைய கருத்தை சொல்வதற்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார் .
“இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி மாறும், காட்சி மாறும். நீட் ஜீரோ ஆகும்” என்றார். 33 சதவீதம் மகளிர் இட ஒதுக்கீடு கானல் நீர் போன்றது என்றார். “வரும் - ஆனால் வராது” என நகைப்பாக பதில் அளித்தார்.