ஆவின் பால் விநியோகத்தில் 3-வது நாளாக தொடரும் பிரச்சினை காரணமாக பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
பால் வரத்து சரிவு, தொழிலாளர்கள் வருகை குறைவு உள்ளிட்ட பிரச்சனைகளால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் லிட்டர் பால் வினியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அனுமதியின்றி கட்டப்பட்ட 2ம் தளம்...அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!
தாம்பரம், அடையாறு, வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை சரி செய்ய ஆவின் நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.