தொடரும் அட்டூழியம்!! ஒரே படகில் கடலுக்கு சென்ற 4 மீனவர்களை.. கைது செய்த இலங்கை கடற்படை!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் அட்டூழியம்!! ஒரே படகில் கடலுக்கு சென்ற 4 மீனவர்களை.. கைது செய்த இலங்கை கடற்படை!!

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர், வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு, இன்று காலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்நிலையில் அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், ஒரே படகில் சென்ற 4 மீனவர்களை கைது செய்தனர். மீனவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து மீனவர்களை ஊர்க்காவல்துறை துறைமுகத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மீனவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.