அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு...! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு...!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு...! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு...!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படிஉயர்த்தி வழங்குவதாக தமிழ்நாடு அரசு  அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. 

அரசு அலுவலர்கள்  மற்றும் ஆசிரியர்களுக்கு 38 % -ஆக உள்ள  அகவிலைப்படியானது,  ஏப்ரல் 1- ம் தேதி முதல் 4% உயர்த்தப்பட்டு 42 % -ஆக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 

மேலும், அரசின் திட்டங்கலாய் மக்களிடம் கொண்டு சேர்க்கும்  பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் ஆசிரியர்கள் மாறும் அரசு அலுவலர்களை முழுமையாக உணர்ந்துள்ள அரசு அவன்  நலனைத் தொடர்ந்து பாதுகாத்து வருவதாகவும், இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த கடந்த அரசு விட்டு சென்ற கடும் நிதி நெருக்கடிகள், கடன்சுமை, மற்றும் கொரோனா பெருந்தோற்றால் ஏற்பட்ட வருவாய் இழப்பு;  ஆகியவற்றுக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன்  அரசு செயல்பட்டு  வருவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார். 

இதையும் படிக்க     }  " ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் இல்லை என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை.." - டிடிவி தினகரன்.

அந்தவகையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்திவரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து இந்த திட்டத்தினை ஏப்ரல் 1-ம் தேதி முதல் கணக்கிட்டு  செயல்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவை பிறப்பித்திருக்கிறார். இதன்படி, தற்போது,  38 % -ஆக உள்ள அகவிலைப்படியானது ஏப்ரல் 1-ம் தேதி முதல், 4% உயர்த்தப்பட்டு 48% -ஆக வழங்கப்படும் எனவும், இதனால் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  

 மேலும், இந்த அகவிலைப்படி உயர்வால்  ஆண்டு ஒன்றுக்கு தமிழ்நாடு அரசுக்கு 2366.82 கோடி ரூபாய் கூடுதல் செலவீனம் ஏற்படும் எனவும், எனினும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

மேலும், அரசு அலுவலர்களா மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து வரும்காலங்களிலும் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதனை பின்பற்றி அகவிலைப்படி உயர்வினை செயல்படுத்தும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். 

இதையும் படிக்க     }  " கருத்தியல் முரண்கள் இருந்தாலும்,... பாஜகவுக்கு எதிரான இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும்..!" - திருமாவளவன்.