சிக்கன் தருவியா...மாட்டியா...ரகளை செய்த இளைஞர்கள்...!

சிக்கன் தருவியா...மாட்டியா...ரகளை செய்த இளைஞர்கள்...!

பெரவள்ளூரில் உள்ள உணவகம் ஒன்றில் சிக்கன் கேட்டு தகராறு, உணவகத்தை அடித்து உடைத்த நான்கு ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிக்கன் கேட்ட போதை ஆசாமிகள்:

சென்னை பெரவள்ளூர் பெரியார் நகர் ஜெகநாதன் சாலை பகுதியை சேர்ந்தவர் பிரவீன். 32 வயதான இவர் அதே இடத்தில் உணவகம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு வியாபாரம் முடித்துவிட்டு உணவகத்தை மூடும் நேரத்தில் நான்கு பேர் உணவகத்திற்கு வந்து சிக்கன் கேட்டுள்ளனர்.

தகராறு செய்த போதை ஆசாமிகள்:

உணவகத்தை மூடும் நேரத்தில் வந்ததால் சிக்கன் தீர்ந்து  விட்டதாக பிரவீன் கூறியுள்ளார். ஆனால், அதை ஏற்காத அந்த நான்கு பேரும் சிக்கன் கொடுத்தால் தான் கடையை விட்டு செல்வோம் என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவீன் பிரிட்ஜில் இருந்த சிக்கனை எடுத்து அவர்களுக்கு தயார் செய்து கொடுத்துள்ளார்.  

இதையும் படிக்க: ”தாய்நாடு காக்க வேண்டுமென்றால் செங்குருதி சிந்துவது எங்களுக்கு வெல்லமடா. தோளோடு தோள் நின்று நான் வாளை சுழற்றினால் இந்த வையகம் நடுங்குமடா”

கைது செய்த போலீசார்:

சிக்கனை சாப்பிட்டு முடித்த அந்த நான்கு பேரும், பணம் தர முடியாது எனக்கூறி கடையில் இருந்த பொருட்களை வெளியே தள்ளி உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதனைப் பார்த்து கொண்டிருந்த அக்கம்பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெரவள்ளூர் போலீசார் மது போதையில் தகராறில் ஈடுபட்ட நான்கு பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

சிறையில் அடைப்பு:

விசாரணையில்,  கொளத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ ஜீவா, தினகரன் என்பது தெரிய வந்தது. அதுமட்டுமல்லாமல், கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.  இதனையடுத்து அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்த பெரவள்ளூர் போலீசார், இவர்கள் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.