40 ஆண்டு போராட்டம்..! தடுப்பணைக்கு பூமி பூஜை..! விவசாயிகள் வரவேற்பு...!

40 ஆண்டு போராட்டம்..! தடுப்பணைக்கு பூமி பூஜை..! விவசாயிகள் வரவேற்பு...!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிய நிலையில் தடுப்பணைக்கு இன்று பூமி பூஜை போடப்பட்டது இதை  அப்பகுதி  விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

வைகை ஆற்றின் வலது பிரதான கால்வாய் மூலம் மானாமதுரை அருகே கட்டிகுளம் கண்மாய் பாசன வசதி பெறுகிறது. 396 எக்டேர் பரப்பளவுள்ள கண்மாயை நம்பி ஆயிரத்து 100 எக்ட்ர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர கட்டிகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து முல்லைகுளம், கஞ்சிமடை உள்ளிட்ட கிராம கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்லும். 

வைகை ஆற்றில் இருந்து நேரடி கால்வாய் மூலம் பாசன வசதி பெற்றாலும் மாவட்டத்தின் கடைசியில் கால்வாய் இருப்பதால் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டாலும் கண்மாய் நிரம்புவதில்லை. மேலும் வைகை ஆறு பள்ளமாக மாறிவிட்டதால் கால்வாயில் தண்ணீர் செல்வதில்லை. இதனால், ஒவ்வொரு வருடமும் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் போது விவசாயிகள் வீடுகள்தோறும் பணம் வசூல் செய்து ஆற்றில் மண் கரை அமைத்து கால்வாயில் தண்ணீர் கொண்டு செல்கின்றனர். இதனை தவிர்க்க கட்டிகுளம் கால்வாய் முகப்பில் தடுப்பணை கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 

 இதையும் படிக்க:... ஊழலை எதிர்த்து போராடக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக தான்...! நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை பேட்டி...!

மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் 23 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவைச் சேர்ந்த தமிழரசி எம். எல்.ஏ. வாக தேர்வு செய்யப்பட்ட பின் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதன்படி வைகை ஆற்றில் கட்டிகுளம் கால்வாய் முகப்பில் 30 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்ட தீர்மானிக்கப்பட்டு இன்று கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டது.

இந்த விழாவில் எம். எல்.ஏ. தமிழரசி, மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தடுப்பணை கட்டப்பட்டால் கட்டிகுளம், முத்தனேந்தல், ராஜகம்பீரம், மிளகனுர், பெருமச்சேரி உள்ளிட்ட கிராமங்கள் பாசன வசதி பெறும், மேலும் பொதுப்பணித்துறை சார்பில் தடுப்பணைத்  திட்டம் குறித்த மினியேச்சர் சிற்பமும் பார்வைக்கு முதன் முறையாக வைக்கப்பட்டிருக்கிறது. 

இதையும் படிக்க:... அண்ணாமலைக்கு முட்டை மார்க் நக்கல் பாணியில் எஸ்.வி.சேகர்

இதில் தடுப்பணை எப்படி கட்டப்படுகிறது. கட்டிகுளம் கண்மாய்க்கு தண்ணீர் செல்வது எப்படி என காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததை விவசாயிகள் வரவேற்றனர். நீண்ட கால போராட்டத்திற்கு தீர்வு கண்ட திமுக அரசுக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்தனர்.