சும்மா, சும்மா அடித்து வந்த நண்பர்; கொலை செய்த 5 பேர் கைது!

Published on
Updated on
1 min read

பள்ளிக்கரணையில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் ஐந்து பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். ஆடிக்கடி ஆபாச வார்த்தைகளால் திட்டியதாலும் அடிக்கடி அடித்து வந்ததாலும் திட்டம் தீட்டி கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். 

சென்னை பள்ளிகரணை, மயிலை பாலாஜி நகரை சேர்ந்தவர் பிரசாந்த்(வயது 28) இவர் நேற்றைய முன்தினம் இரவு இவரது வீட்டிற்கு அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நணபர்களோடு சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நான்கு பேர் சேர்ந்து பிரசாந்தை கத்தியால் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர். 

ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரசாந்தை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பிரசாந்த் உயிரிழந்தார். 

தகவல் அறிந்த பள்ளிக்கரணை காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் நண்பர்களுடன் சென்றது தெரியவந்துள்ளது. 

பின்னர் மது அருந்த அழைத்து சென்று நண்பனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்களை தேடி வந்த நிலையில் அதே பகுதியில் பதுங்கி இருந்த 5 பேரை கைது காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் சரத்குமார், இம்மானுவேல், ஜெபராஜ், முஹம்மது ஷகில், தில்லோஷ்வரன் என்பது தெரியவந்தது. 

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரசாத் என்பவர் எங்களையும் எனது தாயையும் ஆபாச வார்த்தையில் பேசியதால் மது போதையில் இருந்த நாங்கள் ஆத்திரமடைந்து பிரசாந்தை கொலை செய்தோம் என்றும் பிரசாந்த் அடிக்கடி எங்களை தகாத வார்த்தைகளை திட்டி எங்களை அடித்து வந்ததால் திட்டம் தீட்டி மது அருந்த அழைத்து சென்றபோது அதேபோல் ஆபாச வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரமடைந்து பிரசாந்த் கொன்றதாக ஐந்து பேர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

பின்னர் சரத்குமார், இம்மானுவேல்,  ஜெபராஜ், முஹம்மது ஷகில், திலோதிஷ்வரன் ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com