விருதுநகர் பட்டாசு பிரதிநிதிகளுக்கு 5 கோடி நிதி முதலமைச்சர் வழங்கல்

விருதுநகர் பட்டாசு பிரதிநிதிகளுக்கு 5 கோடி நிதி முதலமைச்சர் வழங்கல்

விருதுநகர் மாவட்டம் பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் சங்கங்களின் பிரதிநிதிகளை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியத்திற்கு 5 கோடி ரூபாய் பங்களிப்பு நிதியினை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர். 


தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியத்திற்கு 5.20 கோடி ரூபாய் பங்களிப்பு நிதியினை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வழங்கி உள்ளார்.  இந்த நிதியினை  தொழிலாளர் நலனுக்காக பயன்படுத்த இருப்பதாக தெரிவித்தனர். மேலும் தொழிலாளர் நலன் என்பது தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும் எனவும்,  தொழிலாளர்களின் பாதுகாப்பு நிதியை வைத்து தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். 

மேலும் படிக்க| தமிழ்நாட்டில் குறைவான அளவிலேயே பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் பதிவு

தொடர்ந்து பேசிய அவர், தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக துறையின் அதிகாரிகள் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளை தொடர்ந்து கண்காணித்து கொண்டு இருப்பதாகவும் ஒரு சில நேரங்களில் விபத்து தவிர்க்க முடியாத சூழலில் ஏற்படுகிறது, இனி வரக்கூடிய காலங்களில் அந்த விபத்து கூட ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு பட்டாசு விபத்து இல்லாத சிவகாசியை உருவாக்குவோம் என தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு குறித்து அவர்களை அழைத்து பேசி வருவதாகவும் கூறினார்.