
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் இருப்பு பாதை போலீசார் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது தன்பாத் ரயில், வாணியம்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது இருப்பு பாதை போலீசார் பாலமுருகன், சங்கர், கண்ணன் ஆகியோர் சோதனை செய்ததில் S4 கோச் கழிவறை அருகே கேட்பார் அற்று கிடந்த ஐந்து பண்டல்கள் அடங்கிய சுமார் ஐந்து கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.
மேலும் கஞ்சாவை, இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.