கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!!
கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்புநிதி கொடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிதீவிரமடைந்து வருகிறது.
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள்
ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகிறது.
இதனால் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஆனால் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும் இறப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .அதில் தற்போது முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்
அவை ,
--> பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, அரசின் இல்லங்களில், மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் இடம்.
--> கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்புநிதி.
--> குழந்தைகளின் பெயரில் செலுத்தப்படும் ரூ.5 லட்சம் வைப்புநிதியை, அவர்கள் 18 வயது பூர்த்தியான பின் எடுத்துக்கொள்ளலாம்.
--> 18 வயது பூர்த்தியாகும்போது ரூ.5 லட்சம் வைப்புநிதி, வட்டித் தொகையோடு சேர்த்து --> வழங்கப்படும் .
--> குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்டவற்றை அரசே ஏற்கும்.
--> கொரோனா தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளின் தந்தை அல்லது தாய்க்கு உடனடியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
--> பெற்றோரை இழந்து உறவினர்கள் அல்லது கார்டியன்கள் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் பராமரிப்புச் செலவாக ரூ.3 ஆயிரம் உதவித் தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு