50 கோடி மதிப்பில் மீன் வடிவிலான வண்ண மீன் வர்த்தக மையம் !!!

50 கோடி மதிப்பில் மீன் வடிவிலான  வண்ண மீன் வர்த்தக மையம் !!!
Published on
Updated on
1 min read

கொளத்தூரில் ரூ.50 கோடியில் வண்ண மீன் வர்த்தக மையம்

சென்னை கொளத்தூர் பாடசாலை தெரு, தெற்கு மாட வீதி ஆகிய தெருக்களில் 200க்கும் மேற்பட்ட வண்ண மீன் விற்பனை கடைகள் உள்ளன. இங்கு 300 வகையான வண்ண மீன்கள் (அலங்கார மீன்) உற்பத்தி, விற்பனை மற்றும் ஏற்றுமதி பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.

சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் இத்தொழிலை மேற்கொண்டு வரும் நிலையில், வண்ண மீன் உற்பத்தியைப் பெருக்கவும், வண்ண மீன்களை எளிதாக சந்தைப்படுத்தவும், ஏற்றுமதி மூலம் தமிழ்நாட்டின் வண்ண மீன் வர்த்தகத்தை அதிகரிக்கவும் சென்னை கொளத்தூரில் ரூ.50 கோடியில் வண்ண மீன் வர்த்தக மையம் நிறுவப்படும் என்று, கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

அதனைத் தொடர்ந்து கொளத்தூரில் வண்ண மீன்கள் வர்த்தக மையம் அமைக்க இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்து சூழ்நிலையில், தற்போது இடம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அலங்கார மீன் உற்பத்தியில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு அடுத்தபடியாக, சென்னையில் உள்ள கொளத்தூர் அலங்கார மீன் வர்த்தகத்தின் முக்கிய மையமாக உள்ளது.

வர்த்தக மையத்திற்காக 3.94 ஏக்கர் பரப்பிலும், நிர்வாக கட்டிடத்திற்காக 4785 சதுர அடியிலும் அலங்கார மீன் வர்த்தக மையத்தை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராகவுள்ளது.மேலும் மீன் வடிவில் வர்த்தக மையத்தை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு, திட்ட வரைபடம் (வடிவமைப்பு) தற்போது தயாராகியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com