செயின்ட் கோபைன் கண்ணாடி தொழிற்சாலையில் 500 கோடி மதிப்பில் புதிய பிரிவுகள் - முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

ஸ்ரீபெரும்புதூர் செயின்ட் கோபைன் கண்ணாடி தொழிற்சாலை  நிறுவனத்தில்  500 கோடி மதிப்பில் 3 புதிய பிரிவுகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  துவக்கி வைத்தார்.

செயின்ட் கோபைன் கண்ணாடி தொழிற்சாலையில் 500 கோடி மதிப்பில் புதிய பிரிவுகள் - முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் கோபைன் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை 1998 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். 

2000-ஆம் ஆண்டில் தொடங்கி தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்று வரும் இந்த தொழிற்சாலையில் ஏற்கனவே மூன்று பிரிவுகள் உள்ளன. இதில் கூடுதலாக புதியதாக 500 கோடி மதிப்பீட்டில் மூன்று புதிய பிரிவுகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். அதன் பின்னர் 3 தளங்களையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.

புதிதாக உருவாக்கப்பட்ட கிளைகள் மூலம் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணாடித் தொழிற்சாலை உலகின் முதலாவது மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த வளாகமாக உள்ளது. 75 நாடுகளில் உள்ள செயின்ட் கோபின் தொழிற்சாலையில் சுமார் ஒரு லட்சத்து 76 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  தமிழகத்தில் 4,700 கோடி மதிப்பில் 4 இடங்களில் 15 தொழிற்சாலை தொடங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.