ரூ.50 லட்சம் மதிப்பிலான...550 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்...!

ரூ.50 லட்சம் மதிப்பிலான...550 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்...!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 550 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

ராமேஸ்வரம் அடுத்த புலித்தேவன் நகர் பகுதியில் லிங்கம் என்பவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கடலோர குழுமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையும் படிக்க : ட்விட்டருக்கு சவாலாக வருகிறது இன்ஸ்டா...! பயனாளர்களின் அதிருப்தி தான் காரணமா...?

அதன் பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீசார் லிங்கம் என்பவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் சோதனை செய்தனர். அப்போது,  இலங்கைக்கு கடத்துவதற்காக 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட
550 கிலோ கடல் அட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் 550 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்து, வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.