விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா, கென்னிஸ்டன் பெர்னாண்டோ, பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், தர்மேந்திரன், மோகன் ஆகிய ஆறு ஆறு பேரை தேசிய புலனாய்வு சிறப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் கைது செய்யப்பட்ட 6 பேர் மீது இன்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் நீதிபதி இளவழகன் முன்னிலையில் 2000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.