ஆடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல்.... 2 பெண்கள் உட்பட 6 பயணிகள் கைது....சுங்கத்துறை அதிரடி....!!

இலங்கையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.68 லட்சம் மதிப்புடைய 1.55 கிலோ தங்கத்தை ஆடைகளுக்குள் மறைத்து கடத்தி வந்த 2 பெண்கள் உட்பட 6 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல்.... 2 பெண்கள் உட்பட 6 பயணிகள் கைது....சுங்கத்துறை அதிரடி....!!

இலங்கையிலிருந்து சென்னை பன்னாட்டு விமானநிலையத்திற்கு ஏா்இந்தியா விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னை, சிவகங்கையை சோ்ந்த 2 பெண்கள் உட்பட 6 போ் மீது சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகம் ஏற்பட்டது.

அவா்களை நிறுத்தி உடமைகளை சோதனை செய்தனர் அதன்பின்பு தனி அறைகளுக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவா்களின் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து தங்கப்பசை கடத்தி வந்தது தெரியவந்தது.

அதனைதொடர்ந்து அவா்கள் 6 பேரிடமிருந்து ரூ.68 லட்சம் மதிப்புடைய 1.55 கிலோ தங்கப்பசைகளை பறிமுதல் செய்து அதோடு கடத்தல் பயணிகள் 6 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com