"5 ஆண்டுகளில் 714 கோயில்கள் புனரமைக்கப்படும்"  அமைச்சர் சேகர் பாபு!!

5 ஆண்டுகளில் 714 பழைமையான கோவில்கள் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்  என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேரடி நியமனம் மூலம் திருக்கோயில்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 5 பெண் ஓதுவார்கள் உள்பட 15 ஓதுவார்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "இன்றைக்கு 15 ஓதுவார்கள் பணிநியமன ஆணையம் நடைபெற்றது. ஆணுக்கு பெண் நிகர் என்பதை நிரூபிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் அரசு செயல்பாட்டில் ஏற்கனவே 5 கோவில்களில் பெண் ஓதுவார்கள் இருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "தமிழில் இறைவனை இசையோடு வழிபடுவது சைவ சமயத்தில் ஓதுவார்கள் பணி செய்கின்றனர், ஓதுவார்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கன செயல்களை நடத்தி வருகிறோம் என்றார்.

மேலும், "மத வெறியை தூண்டும் வகையில் இந்து அறநிலையத்துறையின் செயல்களை அவமதித்து விமர்சிப்பவர்கள், நல்ல விசயங்கள் என தெரிந்து கொண்டும் அவதூறு அளிக்கும் நபர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை 5 ஆண்டுகளில் 714 திருக்கோவில்களை மரு சீரமைப்பு செய்ய திட்டம் அமைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || கர்நாடகாவை தொடர்ந்து ராஜஸ்தானிலும் வெற்றிக்கொடி நாட்டுவாரா சசிகாந்த் செந்தில்?