மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் எச்சரிக்கை! வரும் கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வுக்கு வருகைப் பதிவு அவசியம்!

மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் எச்சரிக்கை! வரும் கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வுக்கு  வருகைப் பதிவு அவசியம்!
Published on
Updated on
1 min read

கோடைவெயில் காரணமாக 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத் தேர்வை முன்கூட்டியே நடத்துவது குறித்து ஆலோசனைக்குப் பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் தேன் சிட்டு இதழ் மூலம் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான வினாடி வினா போட்டியை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அளவில் நடத்தப்படும் வினாடி வினா போட்டியில் தேர்வாகும் 25 அரசுப்பள்ளி மாணவர்கள் வெளிநாடு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாக கூறினார்.

மேலும், பள்ளிக்கல்வித்துறையில் இருந்து மாணவர்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் அளித்திருப்பதாகவும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த கல்வியாண்டில் தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனா காலகட்டத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் வருகைப்பதிவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால், 75 சதவீதம் வருகைப்பதிவு உள்ள மாணவர்களுக்கு மட்டுமே ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்ற நடைமுறை, வரும் கல்வியாண்டு முதல் கடைபிடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கோடைவெயில் காரணமாக 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பொதுத் தேர்வை முன்கூட்டியே நடத்துவது குறித்து ஆலோசனை செய்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்,

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com