800 காளைகள்.. 300 மாடுபிடி வீரர்கள் - ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கி கிராமத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைத்தார்.

800 காளைகள்.. 300 மாடுபிடி வீரர்கள் -  ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைத்தார்

மறமடக்கி கிராமத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும் பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு வட மஞ்சுவிரட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டு முதல் முறையாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் முயற்சியால் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 800 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வாடிவாசலிலிருந்து துள்ளிக்குதித்து சீறிப் பாய்ந்த காளைகளை வீரர்கள் கட்டித் தழுவி அடக்கி வருகின்றனர்.

போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களின் பிடியில் சிக்காமல் செல்லும் காளைகளுக்கும் தங்கக்காசு, கட்டில், பீரோ, சைக்கிள், உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.