நேரம் தவறாமல் விமானங்கள் இயக்கம் : சென்னை விமான நிலையத்திற்கு 8-வது இடம்

கடந்த ஆண்டு சர்வதேச அளவில் குறித்த நேரத்தில் விமானங்களை இயக்கிய விமான நிலையங்களில் பட்டியலில், சென்னை விமான நிலையம் 8-வது இடத்தை பிடித்துள்ளது.
நேரம் தவறாமல் விமானங்கள் இயக்கம் : சென்னை விமான நிலையத்திற்கு 8-வது இடம்
Published on
Updated on
1 min read

சர்வதேச அளவில் விமான போக்குவரத்தில் சிறப்பாக செயல்பட்ட விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் குறித்த கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையை, சிரியம் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து சென்னை விமான நிலையம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

அதன்படி உலக அளவில் நேரம் தவறாமல் விமானங்களை இயக்கிய விமான நிலையங்களின் பட்டியலில், சென்னை சர்வதேச விமான நிலையம் 8-வது இடத்தில் உள்ளது. சென்னை விமான நிலையத்தில் 89 புள்ளி 32 சதவீதம் சரியான நேரத்திற்கு விமானங்கள் இயக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 96 புள்ளி 51 சதவீதத்துடன் ஜப்பானின் இட்டாமி விமான நிலையம் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com