90% மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது - அமைச்சர் சிவசங்கர்!

சென்னை திருவொற்றியூரை பொறுத்தவரை 90 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டதாகவும், தண்ணீர் தேங்கியிருக்கும் தாழ்வான இடங்களில் மட்டும் பாதுகாப்பு கருதி மின் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். 

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிய நிலையில், சென்னை பகுதியை முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் சென்னை வாசிகள் வெளியே வர முடியாமல், அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்து வந்தனர். அதேசமயம், சென்னை முழுவதும் மின் தடையும் ஏற்பட்டது. அந்தவகையில் வடசென்னையில் திருவொற்றியூர் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.  

இதையும் படிக்க : இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடி வழங்க வேண்டும் - முதலமைச்சர் கோரிக்கை!

இந்நிலையில் திருவொற்றியூர் பகுதிக்கு வருகை புரிந்த அமைச்சர் சிவசங்கர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருள்களை வழங்கினார். 

தொடர்ந்து பேசியவர், சென்னை திருவொற்றியூரை பொறுத்தவரை 90 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டதாகவும், தண்ணீர் தேங்கியிருக்கும் தாழ்வான இடங்களில் மட்டும் பாதுகாப்பு கருதி மின் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், நாளைக்குள் அனைத்து இடங்களிலும் மின்சாரம் சீராக வழங்கப்படும் எனவும் அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்தார்.