ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்ட 9-பேர் கொண்ட  ஆய்வுக் குழு!

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்ட 9-பேர் கொண்ட  ஆய்வுக் குழு!

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் துணை  ஆட்சியர் தலைமையிலான 9-பேர் கொண்ட ஆய்வுக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

5 ஆண்டுகளாக சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லிட் அலையை திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தது. அவ்வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, அந்நிறுவனம், ஆலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி ஒரு மனு அளித்திருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,  ஆலையில் மீதமுள்ள ஜிப்சம் கழிவுகளை அகற்றுதல், அபாயகரமான கழிவுகளை அகற்றுதல், அலையின் பசுமை வளையத்தை பராமரிப்பது மற்றும் புதர்களை அகற்றி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவது என 4 பணிகளுக்கு மற்றும் அனுமதி அளித்து தீர்ப்பளித்தது.

இதையறிந்த அப்பகுதி மக்கள், வேதாந்தா நிறுவனத்தின் குழுவை, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, அலையின் உள்ளே விடமாட்டோம் என போராட்டம் நடத்தினர். மாறாக, அரசு நியமிக்கும் குழு மட்டுமே ஸ்டெர்லைட் அலையின் உள்ளே சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து, தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜின் பரிந்துரைப் படி, அரசு, தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உள்ளிட்ட  9 பேர் கொண்ட மேலாண்மை குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இந்த குழு இன்று, அலையின் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அலையக் கழிவுகள் விரைவில் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.