‘விடுதலை அரங்கில் வீரத்தமிழகம்’ என்ற 3டி ஒளி-ஒலி காட்சி...இன்று முதல் சென்னை கலைவாணர் அரங்கில்!

‘விடுதலை அரங்கில் வீரத்தமிழகம்’ என்ற 3டி ஒளி-ஒலி காட்சி...இன்று முதல் சென்னை கலைவாணர் அரங்கில்!

சென்னை கலைவாணர் அரங்கில் ‘விடுதலை போரில் வீரத்தமிழகம்’ என்ற முப்பரிமாண ஒளி- ஒலி காட்சி  இன்று திறந்து வைக்கப்பட உள்ளது.  

முப்பரிமாண ஒளி- ஒலி காட்சி:

200 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்கள், ஆங்கிலேயரின் அடக்குமுறைகள், சுதந்திரத்தின் அருமை ஆகியவற்றை இளம் தலைமுறையினரிடையே கொண்டு சேர்க்கும் நோக்கில் முப்பரிமாண ஒளி- ஒலி காட்சிக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி, இந்திய விடுதலைக்கு பாடுபட்ட தேசத் தலைவர்களைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

சிப்பாய்களின் புரட்சி:

குறிப்பாக வேலூர் கோட்டையில் நடைபெற்ற சிப்பாய்களின் புரட்சிதான் இந்தியாவில் நடந்த முதல் விடுதலைப் போராகக் கருதப்படுகிறது. அதேபோன்று எண்ணற்ற தலைவர்களின் தியாகங்களையும், வீரங்களையும் காட்சிப்படுத்த உள்ளன. மேலும் விடுதலைக்கு வித்திட்ட ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகளும் இந்நிகழ்ச்சியில் அரங்கேறவுள்ளது.

இன்று தொடக்கம்:

இவையனைத்தையும் பறைச்சாற்றும் விதமாக, 76வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் ‘விடுதலை போரில் வீரத்தமிழகம்’ என்ற முப்பரிமாண ஒளி- ஒலி காட்சி  இன்று திறந்து வைக்கப்பட உள்ளது. இன்று தொடங்கும் இந்நிகழ்ச்சியானது, வரும் 25ம் தேதி வரை ஒளிப்பரப்பப்படவுள்ளது. அதுமட்டுமின்றி காலை  9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியை மக்கள் நுழைவு கட்டணமின்றி கண்டு ரசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.