மருத்துவமனையில் ஆண்குழந்தை மாயம்... மர்ம நபர்கள் யார்..? போலீஸ் விசாரணை...

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை ஒன்று மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவமனையில் ஆண்குழந்தை மாயம்... மர்ம நபர்கள் யார்..? போலீஸ் விசாரணை...
Published on
Updated on
1 min read
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த மாலினி என்ற பெண், கடந்த 18ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மாலினிக்கு நேற்று  ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இன்று காலை பிரசவ வார்டில் இருந்த அந்த குழந்தை மாயமாகியுள்ளது.  குழந்தையின் அருகாமையில் யாரும் இல்லாத நேரத்தில் இந்நிகழ்வு அரங்கேறியுள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தையை திருடி சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com