கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் கர்ப்பிணி மனைவிக்கு கணவன் செய்த வளைகாப்பு! எப்படின்னு பாருங்க..!

கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் கர்ப்பிணி மனைவிக்கு கணவன் செய்த வளைகாப்பு! எப்படின்னு பாருங்க..!

சீர்காழியில், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து, முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையிலும், கர்ப்பிணி பெண்ணுக்கு மகிழ்ச்சியோடு வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கரைப்புரண்டு ஓடும் வெள்ளநீர்:

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீரானது கரைபுரண்டு ஓடுகிறது.

நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள்:

சீர்காழியில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர், பழையார் அருகே உள்ள கடலில் கலக்கிறது. இதனால், ஆற்றின் உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல் உள்ளிட்ட கிராமங்களுக்கு இடையே கடந்த 6 நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் படகின் மூலம் தண்ணீரை கடந்து, அரசின் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

வளைகாப்பு விழா:

இதனிடையே நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவரின் மனைவி சிவரஞ்சனிக்கு இன்று வளைகாப்பு விழா நடத்துவதாக ஏற்கனவே, முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கிராமம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ள இந்த கடினமான சூழ்நிலையிலும், தாங்கள் தங்கியுள்ள அரசின் நிவாரண முகாமிலேயே விழாவை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, சிவரஞ்சனிக்கு வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

நெகிழ்ச்சி ஏற்படுத்திய தருணம்:

தண்ணீர் சூழ்ந்து வீடுகளை இழந்து நிவாரண முகாமில் தங்கியுள்ள போதிலும், அதையெல்லாம் ஒரு பொருட்டாக கருதாமல், மனைவிக்கு சிறப்பாக வளைகாப்பு நிகழ்ச்சியை கணவன் நடத்தியதும், அந்நிகழ்ச்சியில், பொதுமக்கள் மகிழ்ச்சியோடு இளம்பெண்னுக்கு வளைகாப்பு நடத்திய நிகழ்வும் பார்ப்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.