பள்ளி சிறுமி மீது பைக் மோதி விபத்து..!

பள்ளி சிறுமி மீது பைக் மோதி விபத்து..!

கொளத்தூர் அருகே பள்ளி சிறுமி மீது இருசக்கர வாகனம் மோதியதில், காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கொளத்தூர் வெற்றி நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிரிகேஜி படிக்கும் மாணவி இவாஞ்சிலின்.பள்ளி வாகனத்தில் இருந்து இறங்கி சாலையை கடந்து வீட்டிற்கு செல்ல முயன்றார் அப்போது, பள்ளி வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற இருசக்கரவாகனம், சிறுமி மீது மோதியதில், கீழே விழுந்த சிறுமிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பள்ளி வாகனத்தில் உதவியாளர்கள் வராததே விபத்துக்கு காரணம் என பெற்றோர் புகார் தெரிவித்தனர்.