பள்ளி வளாகம் அருகே கிடந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு.!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளி வளாகம் அருகே கிடந்த நாட்டு வெடிகுண்டு டிராக்டர் ஏறி வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு கோட்டையூரில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று குடியிருப்பு பகுதிக்கு பின் உள்ள நிலத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் விவசாய பணிக்காக தமது டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கு கிடந்த நாட்டு வெடிகுண்டு மீது டிராக்டர் ஏறியதில் வெடிகுண்டு வெடித்து பலத்த சத்தம் கேட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவலர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சுமார் 6 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.