சித்தூர்-தச்சூர்: "6 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக வழக்கு தொடரப்படும்" மார்கண்டேய கட்ஜு!

சித்தூர்-தச்சூர்: "6 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக வழக்கு தொடரப்படும்" மார்கண்டேய கட்ஜு!
Published on
Updated on
1 min read

சித்தூர்-தச்சூர் 6 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்படும் என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ஆறு வழிச்சாலையை  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றன. இந்த சாலை திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு கொஞ்சம் கூட பயனளிக்க போவதில்லை என விவசாய கூட்டமைப்பினரும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளனர். 

சென்னை மண்ணடியில் எஸ்டிபி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர், தச்சூர் முதல் சித்தூர் வரை ஆறு வழி சாலை தேசிய நெடுஞ்சாலைதுறை  அமைப்பதற்காக  நில கையகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  116 கிலோமீட்டர் தூரம் அமைய இருக்கக்கூடிய ஆறு வழி சாலை திட்டத்திற்காக 881 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகின்றன இதனால் 2064 விவசாயிகள் மொத்தமாக பாதிக்கப்படுகிறார்கள்.

 2018 இல் விவசாயிகளுக்கு சில வாக்குறுதிகள் அளித்து ஆறு வழி சாலை அமைப்பதற்காக   நிலத்தை கையகப்படுத்துவதாக கூறினார்கள்.அதை மாற்றி எந்தவித வாக்குறுதியும் நிறைவேற்றாமல் நிலத்தை கையகப்படுத்தும் வேலையில் மும்முறமாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.

முன்னதாக நிலத்தை கையகப்படுத்திய பின்பு இரண்டு பக்கமும் விவசாயம் செய்து கொள்வதற்காக நிலம் ஒதுக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டதாகவும் ஆனால் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள திட்டத்தின் படி சாலை மட்டுமே அமைக்கும் திட்டம் உள்ளதாகவும்  விவசாயம் செய்வதற்கான வழிகள் அமைக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு செல்வதற்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மூன்று போகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் ஒருபோகம் மட்டுமே  விளைவதாக மதிப்பிட்டுள்ளதாக  குற்றம் சாட்டிய அவர் ஒரு போகம் விளையும் நிலம் என கணக்கிட்டு இரண்டு மடங்கு விலையை குறைத்து மதிப்பிட்டுள்ளனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் ஆறு வழி சாலை திட்டத்திற்கு சட்டப்படி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக ஓய்வு பெற்ற நீதிபதி தெரிவித்தார் 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com