வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி பலி..!

தென்காசி அருகே கீழப்புலியூரில் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி உயிரிழப்பு.

வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி பலி..!

தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் உச்சிமகாளி அம்மன் கோவில் ஒன்றாம் தெருவை சேர்ந்தவர்  இசக்கி. இவரது வீட்டை புணரமைப்பு செய்யும் பணியில் அதே பகுதியைச் சார்ந்த முருகன், பிரசாந்த், குத்தாலிங்கம் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் சுவர் அவர்கள் மீது விழுந்தது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு, தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் முருகன் என்பவர் உயிரிழந்தார்.  

மேலும், பிரசாந்த் மற்றும் குத்தாலிங்கம் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பிரசாந்த் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.