அதிமுக அலுவலகத்தை கைப்பற்றுவதற்கு ஈ.பி.எஸ் நடத்தும் அடுத்தக்கட்ட ஆலோசனை கூட்டம்!

அதிமுக அலுவலகத்தை கைப்பற்றுவதற்கு ஈ.பி.எஸ்  நடத்தும் அடுத்தக்கட்ட ஆலோசனை கூட்டம்!
Published on
Updated on
1 min read

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ். தேர்வு செய்யப்பட்டதோடு, ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அலுவலகத்தை கைப்பற்றுவதர்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, ஈ.பி.எஸ். சட்ட ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து தொண்டர்கள் வாழ்த்து:

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, நேற்று சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் தொடர்ச்சியாக சென்று பூங்கொத்துக்களை கொடுத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

ஓ.பி.எஸ் -ல் கைப்பற்றப்பட்டு பின் சீல் வைக்கப்பட்ட அதிமுக அலுவலகம்:

இந்த சூழ்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்ட ஈ.பி.எஸ், அதிமுக அலுவலகத்தில் இருந்து இன்னும் பதவியை ஏற்று கொள்ளவில்லை. ஈ.பி.எஸ் அதிமுக அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்னதாகவே ஓ.பி.எஸ் தரப்பினர் அங்கு சென்று அதிமுக அலுவலகத்தை கைப்பற்றினர். பின்னர் வருவாய் துறையினர் அங்கு சென்று ஓ.பி.எஸ் தரப்பினரை வெளியேற்றிவிட்டு, அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

அதிமுக அலுவலகத்தை கைப்பற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம்:

இதனிடையே அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் எப்படி கைப்பற்றுவது, வருவாய் துறையினர் சீல் வைத்த அலுவலகத்தை எப்படி சட்டரீதியாக மீட்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இல்லத்தில்   தற்போது ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது. ஒருபுறம் தொடண்டர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துக்கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு புறம் அதிமுகவின் சட்ட ஆலோசகரான இன்பதுரை, எடப்பாடி பழனிசாமி, எம்.பி. தம்பிதுரை ஆகியோரின் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, ஓ.பி.எஸ் தரப்பினர் நீதிமன்றம் செல்வதை தவிர்த்து, அடுத்தக்கட்டமாக இந்திய தேர்தல் ஆணையம் செல்வது தொடர்பாக ஓ.பி.எஸ் தரப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வரும், இந்த நிலையில் அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி எப்படி கைப்பற்றுவது தொடர்பாக  ஈ.பி.எஸ் இல்லத்தில் இந்த ஆலோசனை கூட்டமானது  நடைபெற்று வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com