வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...கனமழைக்கு எச்சரிக்கை!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...கனமழைக்கு எச்சரிக்கை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை மையம்:

வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒருசில இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்  வானிலை மையம் கூறியுள்ளது.
 
இதனிடையே சென்னைக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கே சுமார் 750 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: 2015இல் யாரை விமர்சித்து நீட்கப்பட்டாரோ...இன்று அவர்களுடன் இணைப்பு...கேவை செல்வராஜ் அதிரடி!

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சூறாவளி புயலாக மாறி நாளை காலை வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்க கடலை அடைய வாய்ப்பு உள்ளதாகவும், தொடர்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.