சமத்துவத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பேஷன் ஷோ

சமத்துவத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பேஷன் ஷோ
Published on
Updated on
1 min read

ரவுண்ட் டேபிள் இந்தியா வாரம் கொண்டாட்டத்தில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பேஷன் ஷோ நடைபெற்றது. 

ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் சார்பில் சென்னை விமான நிலையத்தில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பேஷன் ஷோ நடைபெற்றது. இந்த பேஷன் ஷோவில், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள், பார்வை இழந்த மாற்றுத் திறனாளிகள்,  விமான நிலைய அதிகாரிகளின் நண்பர்கள், திருநங்கைகள் மற்றும் ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்புகளின்  உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

சமூக ஆர்வலரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான அப்சரா ரெட்டி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அனைவரும் சமம் என்கிற சமத்துவ ரேம்ப் வாக் செய்தது பாரவையாளர்களை ஈர்த்தது. அதுமட்டுமல்லாமல், இந்நிகழ்ச்சிக்கு ஹோப் ஹோம் - இல்லத்தில் இருந்து வந்திருந்த பார்வை மாற்றுத்திறனாளிகள் குழுவினர் இசை நிகழ்ச்சி நடத்தி மேடையை அலங்கரித்தனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் ஹோப் ஹோம் நிறுவனர் சரண்யா, ஆசிட் வீச்சில் இருந்து பிழைத்து தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வரும் பாபி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஒன்றாக நடைபோட்டது, இந்த சமூகம் அனைவருக்குமான சமத்துவ சமூகம் என்பதை உறுதிப்படுத்தியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com