ஜனவரி 6-ல் மாநாடு; ஓபிஎஸ் அறிவிப்பு!

கோவையில் ஜனவாி 6-ஆம் தேதி மாபெரும் மாநாடு நடத்தப்படும் என முன்னாள் முதலமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் தொிவித்துள்ளாா்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தன் அணியால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், அடுத்த கட்டமாக தங்களின் அணியை பலப்படுத்துவது குறித்தும், மாநாடு நடத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.அதன் பின்னர் அடுத்த மாநாடு வரும் ஜனவரி 6 ஆம் தேதி கோவையில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து ஓ. பன்னீர் செல்வம் அறிவித்தார்.

இதையும் படிக்க : பீகாரில் தடம் புரண்ட பயணிகள் ரயில்... 5 பயணிகள் உயிரிழப்பு!!

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில் கோவையில் இந்த மாநாடு நடத்தப்பட இருப்பதாக தெரிவித்தார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி குறித்து அதிமுக தொடர்ச்சியாக பிரச்சனை எழுப்பி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியல் அமைப்பில் அப்படி ஒரு பதவி இல்லை என்று கூறியவர், எப்படி துணை முதலமைச்சர் பதவி அதிகாரம் இல்லாமல் எந்த ஒரு அரசாணையும் போட முடியாதோ அது போன்று தான் துணை முதலமைச்சர் பதவியும் என்று கூறினார்.

மேலும், நீங்களும் துணை முதல்வராக இருந்திருக்கிறீர்களே என்ற கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், துணை முதலமைச்சர் பதவி ஒரு டம்மி பதவி என்று சொல்லியவர், துணை முதல்வராக இருப்பவருக்கு என்று எந்த அதிகாரமும் இல்லை என்றும், எந்த  துறை ஒதுக்கப்பட்டதோ அதற்கான அரசாணை மட்டுமே போட முடியும் என்றும், தனியாக எந்த ஒரு அரசாணையோ உத்தரவோ போட முடியாது எனவும் விளக்கமளித்தார்.