"தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்களாக போற்றி வாழ்ந்தவர்" - எடப்பாடி பழனிசாமி புகழாரம்

தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்களாக போற்றி வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார். 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது பிறந்தநாள் விழா மற்றும் 61-வது குரு பூஜை விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவகத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தேவர் சிலைக்கு 13 கிலோ தங்க கவசம் வழங்கியவர் ஜெயலலிதா என்றும், அதிமுக ஆட்சியில் சென்னை நந்தனத்தில், தேவரின் முழு உருவ சிலை அமைக்கப்பட்டது என்றும் கூறினார்.