திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை...!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், வரும் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 5 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்கும்படி எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க : மகளிர் உரிமை தொகை; 18 முதல் விண்ணப்பிக்கலாம்!

இந்த நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் திமுக எம்.பி. க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், மசோதாக்கள் மீது எவ்வாறு பதிலளித்து பேச வேண்டும் என்பது குறித்து எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார். அப்போது, தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து இந்தியா கூட்டணியோடு இணைந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே எம்.பிக்கள் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, தமிழ்நாட்டிற்கு உரிய காவிரிநீரை கர்நாடக அரசு திறந்து வைக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துவோம் என்றார்.