சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி...500க்கும் மேற்பட்டோர் உற்சாக பங்கேற்பு!

சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி...500க்கும் மேற்பட்டோர் உற்சாக பங்கேற்பு!

சென்னை பெசன்ட் நகர் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம், பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து மினி மாரத்தான் போட்டியை நடத்தினர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம், பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், சென்னை பெசண்ட் நகர் பகுதியில் விபத்தை குறைப்பது, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இதையும் படிக்க : மதுரை மக்கள் செங்கலை எடுப்பதற்கு முன்...வேலையை தொடங்க வேண்டும்...மத்திய அரசுக்கு வலியுறுத்திய உதயநிதி ஸ்டாலின்!

இதில், 5 கிலோ மீட்டர் தூரம் வரையிலான மாரத்தான் போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், 3 கிலோ மீட்டர் தூரம் வரையிலான மாரத்தான் போட்டியை சிஐடியூ தமிழ்நாடு மாநில தலைவர் சவுந்தரராஜனும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர்.