
பதிமூன்று குழந்தைகள் பெற்றெடுத்தபோதும் அறுவை சிகிச்கைக்கு முன்வராத மலை கிராம தம்பதி. சுகாதாரத்துறையினர் அறிவுரைக்கு பின்னரே சிகிச்சைக்கு ஒப்பு கொண்டனர்.
ஈரோடு | அந்தியூர் அருகே பர்கூர் மலை கிராமத்தில் சின்ன மாதையன்-சாந்தி தம்பதிக்கு 12 குழந்தைகள் உள்ள நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு பதிமூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது .
இதனை அறிந்த அம்மாவட்ட சுகாதாரத்துறையினர் கருத்தடை அறுவை சிக்கிச்சையின் விவரங்களை தம்பதிக்கு எடுத்துரைத்தனர். அதற்கு ஒப்புக்கொண்ட சாந்திக்கு சிக்கிச்சையின் போது உடல் ஒத்துழைக்கவில்லை என்பதால் சின்ன மாதையனுக்கு கு.க செய்ய என மருத்துவர்கள் முடிவு செய்தனர் .
இதனை ஏற்க மறுத்த சின்ன மாதையன் சுகாதாரத் துறையினர் வீட்டிற்கு வரும்போதெல்லாம் வன பகுதிக்குள் சென்று மறைந்துவந்துள்ளார்
ஒருகட்டத்தில் இதனை அறிந்துகொண்ட சுகாதாரத்துறையினர் பர்கூர் போலீசார் உதவியுடன் சின்னமாதையன் வீட்டிற்கு சென்று கு.க. விவரங்களை எடுத்துரைத்தனர்.அதன்பின்னர் அவரை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்து நவீன முறையில் கு.க.. அறுவை சிகிச்சை செய்தும் ஊக்க தொகை கொடுத்தும் பாதுகாப்பாக அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.