”பாஜக என்ற ஒரு கட்சி....” செய்தியாளர் சந்திப்பில் கருத்து கூறிய அண்ணாமலை!!

”பாஜக என்ற ஒரு கட்சி....” செய்தியாளர் சந்திப்பில் கருத்து கூறிய அண்ணாமலை!!

Published on

பாஜகவின் வளர்ச்சியை கண்டு தமிழ்நாடு முதலமைச்சருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு விமானம் மூலம் சென்னை திரும்பிய அவர், செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதனை குறிப்பிட்டுள்ளார். பாஜக என்ற ஒரு கட்சி தமிழகத்தில் இல்லை என கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கூறிய முதலமைச்சர் தற்போது அதே கட்சியை எதிர்கட்சியாக நினைப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்தி மொழி பயன்படுத்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ளதாக கூறிய அவர், தமிழ்நாட்டில ஏதாவது ஒரு தேர்வை இந்தியில் எழுத கட்டாயப்படுத்தினால் மாநில பாஜக ஏற்காது எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வருகிற வரும் 30ம் தேதி  சென்னை வர வாய்ப்பில்லை எனவும் அப்போது தெளிவுப்படுத்தினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com