கொதிக்கும் கூழ் அண்டாவில் ஏறி உள்ளே விழுந்து இறந்த நபர்.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி!!

கொதிக்கும் கூழ் அண்டாவில் ஏறி உள்ளே விழுந்து இறந்த நபர்.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி!!
ஆடி மாதம் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது தமிழகத்தின் பல பகுதிகளில் பாரம்பரியமாக இருக்க, மதுரையில், ஒரு நபர், கொதிக்கும் கூழில் விழுந்து சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரபல மதுரை முத்துமாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியன்று, விசேஷ வழிபாடுகள் நடக்கும். அந்த வகையில், கடந்த ஜூலை 30ம் தேதி ஆடி மாத இரண்டாவது வெள்ளிக் கிழமையாக கடந்த வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரணைகள் நடத்தப்பட்டது.
 
அதில், பக்தர்கள் கொடுக்கும் அன்பளிப்பை கொண்டு கூழ்காய்ச்சி அம்மனுக்கு பூஜை முடிந்த பின் பக்கதர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். அதற்காக 6 அண்டாவில் முத்துக்குமார் என்கிற முருகன் சில நபர்களுடன் கூல் காய்ச்சி கொண்டிருந்தார்.
கொதிக்கும் அண்டாவில் விழுந்த நபர்
 
அப்போது, திடீரென முத்துக்குமாருக்கு வலிப்பு வந்த நிலையில், நிலைதடுமாறி கொதிக்கும் கூழ் அண்டாவில் விழுந்தார். உடனடி அவரை மீட்க முயன்ற நபர்கள் மீதும் கொதிக்கும் கூல் கொட்டிய நிலையில், அவரை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதைத்தொடர்ந்து, அவரை கஷ்டப்பட்டு மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த முத்துக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிசிடிவி காட்சிகள்
 
இந்நிலையில், முத்துக்குமார் கொதிக்கும் அண்டாவில் விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை கலங்க வைத்துள்ளது.